திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வீடு, அலுவலகங்கள் பூட்டியிருந்தால் சீல் வைக்க தங்களுக்கு அதிகாரமில்லை என ED ஒப்புக்கொண்டது. சீல் வைத்த நோட்டீசை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித் தர ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து இடைக்கால மனு மீதான தீர்ப்பை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.