சென்னை தாம்பரம் கண்ணடபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், இவர் மனைவி சித்திரா(48) இவர்கள் வீட்டிற்கு வந்த Prefer Finance கடன் வசூலிப்பவர் சசிக்குமார் வாங்கிய கடனுக்கு ஏன் இரண்டுமாதமாக தவனை தொகை கட்டவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு வெங்கடேசன்- சித்திரா தம்பதியினர் தங்கள் யாரும் தனியார் பைனாசில் கடன் வாங்க வில்லை என கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து தம்பதி யோசித்து பார்த்தபோது கடந்த மூன்று மாதம் முன்பாக 7.8.23ம் தேதி அவர்களின் மகள் பிரசவ செலவிற்கு கடனாக பணம் தேவை என பைசா பஜார் எனும் ஆன்லைன் கடன் செயலியில் முயற்சித்துள்ளனர். மேலும் அந்த ஆப் வழிகாட்டுதல் படி ஆதார்கார்டு, பான்கார்டு ஆகிய ஆவனங்களையும் பதிவேற்றம் செய்த நிலையில் அன்று மாலையே நிறைமாத கற்பிணி பெண் ஒருவர் தன் பெயர் திவ்யா என கூறி ஆன்லைன் கடன் செயலியின் லோன் அப்ருவல் அதிகாரி என கூறி வெங்கடேசன்- சித்திராவை புகைபடம், எடுத்துக்கொண்டு கையெழுத்து பெற்றவாறு சென்றுள்ளார். மேலும் அவர்களுக்கு வந்த ஓ.டி.பி யை செல்போன் மூலம் கேட்டு பெற்றதும், அதன் பின்னர் பணம் பெறமால் விட்டது நியாபகம் வந்தது.

இதனையடுத்து தாம்பரம் சைபர் கிரைம் போலீசில் வெங்கடேசன் தன் மனைவி பெயரில் லோன் பெற்று மோசடி நடந்துள்ளது சம்மந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தங்களிடன் கடன் வசூலிக்க வந்த தனியார் பைனான்ஸ் அலுவலர் உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டு புகார் அளித்தார்.

அதன் பேரில் தாம்பரம் காவல் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டி உத்திரவின் பேரில் காவல் உதவி ஆணையாளர் சீனிவாசன் மேற்பார்வையில் உதவி பெண் ஆய்வாளர் தேவிகா நேரடியாக ஐ.ஓ.பி வங்கியில் தனியார் லோன் யாரின் வங்கி கணக்கு என கேட்டறிந்த நிலையில் நெற்குன்றத்தை சேர்ந்த பி.இ கம்யூட்டர் சைன்ஸ் படித்த சித்திரா என்பவர்

( திவ்யாவாக நிறைமாத கற்பிணியாக தாம்பரம் வெங்கடேசன்-சித்திரா வீட்டிற்கு வந்த பெண், தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளார் )

அவரின் கணவர் பொறியாளரான சரவணன் என்பது தெரிய வந்து முறைப்படி சம்மன் அனுப்பபட்டது இதில் சித்திராவை கைகுழந்தையுடன் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது தன் கணவர் சரவணனுடன் சேர்ந்து ஆன்லைன் லோன் எதிர்பார்க்கும் நபர்களை நேரில் சென்று ஆவனங்களை பெற்று மாற்று வங்கி கணக்கு துவங்கி பணத்தை ஏமாற்றியதும், அதுபோல் தான் தாம்பரம் சித்திரா-வெங்கடேஷ் தம்பதியின் பேரில் 2 லட்சத்து 8 ஆயிரம் பணமும், வியாசர் பாடியை சேர்ந்த மாலினி எனும் பெண்ணிடம் ஒருலட்சம், நீலாங்கரையை சேர்ந்த பெண் தாரணி எனும் பெண்ணின் இரண்டு கணக்கில் ஒருலட்சம் மற்றும் மகளிர் உதவி தொகை பணம் 3 ஆயிரம் என ஏமாற்றியதை ஒப்பு கொண்டார்.

மேலும் இதற்காக கணவர் சரவணனுடன் சேர்ந்து பல்வேறு விவரம் அறியாத நபர்களின் ஆதார் கார்டு ,பான் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தகவல்கள் புகைப்படங்களை பெற்று அதனை தங்களின் புகைப்படத்துடன் சேர்ந்து வங்கியில் பணம் பெரும் இடத்தில் தங்களுக்கு சாதகமாகவும், லோன் பெறவுள்ள தனியார் பைனான்சில் விவரம் அறியாமல் ஆவணங்களை கொடுத்தவர்களின் ஆவணங்களையும் கொடுத்து தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் முக்கிய மோசடி நபர் சரவணன் தலைமறைவான நிலையில் அவர் பிடிபட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன்வந்தாலும் முழு அளவில் மோசடி தகவல்கள் வெளியாகும் என தாம்பரம் சைபர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல் துறையினர் ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும், முக்கிய அடையாள ஆவணங்களையும் ஓ.டி.பி உள்ளிட்ட தகவல்களை பிரரிடம் பகிர கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விவரம் அறியாமல் உள்ளவர்கள் உதவி செய்பவர்களிடம் கொடுப்பதாக நினைத்து மோசடி சிக்கி மன உலைச்சலில் பாதிக்க ஏற்படுத்திகொள்கிறார்கள் எனவே பணம் பொருள் மட்டும் அல்லாமல் தனிப்பட்ட தகவல்கள் ஆவணங்களை காசாக்கும் கும்பல்கள் இருபது தெரிந்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.