தன்​னை​யும் பாஜக-வை​யும் விமர்​சிப்​பவர்​களுக்கு பதிலடி கொடுப்​ப​தற்​காக கோவை​யில் பிரத்​யேக வார் ரூம் ஒன்றை வைத்​திருந்​தார் அண்​ணா​மலை. வார் ரூம் மூல​மாக அண்​ணா​மலை தன்னை பிர​தானப்​படுத்​திக் கொள்​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் கூட கிளம்​பின. தலை​வர் பதவியை இழந்த பிறகு அந்த வார் ரூமின் செயல்​பாடு​களை சுருக்​கிய​வர், தற்​போது அதைக் கலைத்து பெங்​களூரு​வுக்​கும் டெல்​லிக்​கும் இரண்டு பிரி​வாக மாற்​றி​விட்​ட​தாகச் சொல்​கி​றார்​கள். மறு உத்​தரவு வரும் வரை வேறு வேலை​கள் கிடைத்​தால் பார்க்​கும்​படி கோவை வார் ரூம் ஆட்​களை அண்​ணா​மலை அறிவுறுத்தி இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.