நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் அக்டோபர் மாதம் வரை புதிய படங்களின் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவரது 64வது படத்தை யார் இயக்குனர் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அவரை இயக்குவார் என்று கூறுகிறார்கள். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடிப்பார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அஜித்குமாரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறும் போது நாங்கள் சந்தித்தது சந்தோஷமான விஷயம் இருவரும் கார்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் புதிய படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் என்ற பரபரப்பு எழுந்துள்ளது