
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில், ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் & 2023 (F4) போட்டி சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (24.11.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விளையாட்டுத் துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியம், சுற்றுலாத் துறை, குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை உட்பட பிற துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.