தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், தற்போது தேமுதிகவில் பொருளாளராக இருக்கும் விஜகாந்தின் மனைவி பிரேமலதா கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுப்பது, மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் நடத்துவது, மாநாடு நடத்துவது குறித்து திட்டங்கள் தீட்டுவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை செய்வது, குறித்து உரையாற்றுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கூடுதல் பொறுப்பு:
அதேபோல், தேமுதிக பொருளாளராக உள்ள பிரேமலதாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விஜகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.