தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நவ.18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனை முன்பு தேமுதிக தொண்டர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.