மேடவாக்கத்தில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் ஸ்கூட்டரில் செல்லும்போது மழை நீரில் கீழே விழுந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேடவாக்கம், வி.ஜி.பி பாபு நகர் முதல் மெயின்ரோட்டில் மேடவாக்கம் பஜார் தண்ணீர் மொத்தமும் இங்கே குவிந்துள்ளது.

பெரிய பள்ளம் ஏற்பட்டு குளம்போல் நீர் தேங்கி உள்ளதால் 2 நாளில் சுமார் 200 பேருக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

மேலும் இன்று பள்ளி சென்று குழந்தையை அழைத்து வந்த தாய் தனது குழந்தையுடன் வண்டியிலிருந்து விழுந்தார். இருவரும் காயமின்றி தப்பினர்.
அந்த பெண் செல்போன் தண்ணீரில் விழுந்து விட்டது. அவர் தலை மொபைல் போனை தேடி கொண்டிருந்த காட்சி பரிதாபமாக இருந்தது.

இதேபோல் பூண்டு ஏத்தி வந்த ஆட்டோ மழை நீரில் பள்ளத்தில் கவிழ்ந்து
தாம்பரம்:-

பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் வி.ஜி.பி பாபு நகரில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது, மேலும் அருகில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் சேதமடைந்த இந்த சாலையிலேயே அதிக வாகனங்கள் சென்றன.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையிலேயே மழைநீர் தேங்கியது.

இந்த நிலையில் குடியிருப்புகளில் பூண்டு விற்பனை செய்ய வந்த லோடு ஆட்டோ ஒன்று சாலை பள்ளத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்து அந்த ஆட்டோவில் இருந்த பூண்டுகள் அனைத்தும் சாலையில் கெரட்டி மழை நீரில் நனைந்து வீனானது. ஆனாலும் அக்கம் பக்கத்தினர் ஆட்டோவை நேர் படுத்தி ஈரமான பூண்டுகளை சேகரித்து கொடுத்தனர்.

இதுபோல் பல்வேறு இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்வதாகவும் அதனால் அந்த சாலையை சீர் செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில் அந்த பகுதியை சேர்ந்த திமுக போட்டி போட்டுக்கொண்டு மழை நீர் பள்ளங்களை சரி செய்து தண்ணீர் வடிய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதற்கிடைய தேசிய பேரிடர் மீட்பு குழு தாம்பரம் வந்துள்ளது மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா ஐ.ஏ.எஸ் நேரில் சென்று அவர்களுடம் மீட்பு பணிகள் குறித்தும், தகவல் பறிமாற்றம், தேவையான உபகரணங்கள், வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடந்து மழை பெய்வதால் தேசிய பேரிடர் மிட்பு குழுவினர் மிட்புபணியில் ஈடுபடவுள்ளனர்.