விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!
உணவு, மருந்துகள், வேளாண் இடு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கு!!
பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைத்திடு!!!

புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை நிதி ஒதுக்கி செயல்படுத்து!

உணவுப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்திடு! ரேஷன் கடையை திறந்து பொது விநியோக முறையை செயல்படுத்து!!

அனைவருக்கும் இலவச கல்வி, சுகாதாரம்,
தண்ணீர் மற்றும் உடல் நல உரிமை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்!
தேசிய கல்விக் கொள்கை, 2020ஐ ரத்து செய்!

அனைவருக்கும் வீடு வழங்கப்படுவதை உறுதி செய்!

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.26,000/- என நிர்ணயம் செய்திடு!

பொதுத்துறை அரசு நிறுவனங்கள். துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிடு!

மின்சாரம் (திருத்த) மசோதா, 2022 ஐ திரும்பப் பெறு!
முன்பணம் செலுத்தும் வகையில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தாதே!!

வேலை செய்வதற்கான உரிமையை அடிப்படையாக்கு! அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பி வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திடு.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு 200 நாள் வேலை மற்றும் நாள் ஒன்றுக்கு ரூ.600/- ஊதியம் வழங்கும் திட்டத்தை நகரப்புறங்களுக்கு விரிவுபடுத்து!

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக, ஒன்றிய அரசு எழுதிக் கொடுத்த உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்து! போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைத்திடு!
அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, அவர்களுக்கு மறுவாழ்வளிக்க நடவடிக்கை எடு!
நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியை தண்டனைக்கு உள்ளாக்கு !

நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெறு!!

குறித்த கால வேலை நியமனம் (பிக்சட் டெர்ம் எம்பிளாய்மென்ட்) முறையை ரத்து செய்! வேலையில் சம ஊதியத்தையும் பணியின் போது பாதுகாப்பையும் உறுதி செய்! கேஷுவல் முறையை முற்றாக ரத்து செய்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு!
பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதிப்படுத்து!!

புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள் AITUC,CITU, INTUC,AICCTU, LLF, MLF, NDLF, விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் கலந்துகொண்டனர்.