
சிகரெட் விற்பனையின் மூலம் வரிக் குறைப்புகளை ஈடுகட்ட அது எண்ணுகிறது.
அதிகரிக்கும் செலவினத்தைச் சமாளிக்க தனிப்பட்ட வரியைக் குறைக்கவிருப்பதாக அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
முன்னைய பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) அரசாங்கம் புகைத்தலுக்கு எதிரான தடையை அறிமுகம் செய்தது. அதன்படி 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, அடுத்த ஆண்டுமுதல் சிகரெட் விற்பனை செய்யத் தடை விதிக்கும் சட்டம் நடப்புக்கு வரவிருந்தது.
இளைஞர்கள் புகைக்கும் பழக்கத்தைத் தொடங்காமல் இருக்கும் நோக்கில் அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. நியூஸிலந்தில், தவிர்க்கக்கூடிய நோய்களுக்குப் புகைத்தலே முக்கியக் காரணமாக விளங்குகிறது.
உலகில் அத்தகைய சட்டத்தை அறிமுகம் செய்த முதல் நாடு, நியூசிலந்து.
சட்டம் மீட்டுக்கொள்ளப்படுவதைச் சுகாதார நிபுணர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.
உலகுக்கே முன்மாதிரியாக விளங்கக்கூடிய சட்டத்தை மீட்டுக்கொள்ளப் போவதாகக் கூறுவது அதிர்ச்சியளிப்பதாக அவர்கள் கூறினர்.