
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறைகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதற்காக சென்னை மாநகராட்சி பகுதிகளில் நியமன அலுவலர்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்று தமிழகம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களை TN Food Safety Consumer App வாயிலாகவும், 9444042322 என்னும் எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாகவும் பதிவு செய்யலாம்- சுகாதாரத்துறை.