கேரளாவின் சபரிமலைக்கு மிக கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு
உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு
தென்காசி – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்
- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் பரவலான மழை, பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கோவை : தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
கோவை: தொடர்மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!