சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி மெயின் ரோடு சங்கர் நகர் பகுதியில் சிவகேசன் என்பவர் 3வருடங்களாக ஆயில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டி மற்றும் சாமி உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக வைத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.