சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ தலைமையில்‌ நடைபெற்ற மாவட்ட தொழில்‌ மைய பொது மேலாளர்கள்‌ ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ 20 தொழில்‌ முனைவோர்களுக்கு ரூ.315.35 லட்சம்‌ மானியத்துடன்‌ ரூ.981.19 லட்சம்‌ வங்கி கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்‌. இக்கூட்டத்தில்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அரசு செயலாளர்‌, அர்ச்சனா பட்நாயக்‌, தொழில்‌ வணிக ஆணையர் எல்‌.நிர்மல்‌ ராஜ்‌, கூடுதல்‌ தொழில்‌ வணிக ஆணையர்‌ கிரேஸ்‌ பச்சோவ்‌, கூடுதல்‌ தொழில்‌ வணிக இயக்குநர்‌ சே.மருதப்பன்‌, ஏகாம்பரம்‌ மற்றும்‌ மாவட்ட பொது மேலாளர்கள்‌ ஆகியோர்‌ கலந்துகொண்டனர்‌.