
தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், திரைப்படத்துறையினர் நல வாரியத்தின் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வேராஜாராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், அலுவல் சாரா உறுப்பினர்கள் முரளி ராமசாமி, எம்.எஸ்.பாஸ்கர், பூச்சி எஸ்.முருகன், போஸ்வெங்கட், மங்கை அரிராஜன், பிரேம்குமார், தாடி பாலாஜி, ஜெ.மதியழகன், வி.பாக்கியராஜ், பரிமளவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.