காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் நடந்த தேசிய ஊழியர் உறவுகள் மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டி.பி.கணேசன் அரங்கில் விழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் அன்பரசன், கலந்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத், பதிவாளர் எஸ் பொன்னுசாமி, ஷிமிசிசிமி துணைத் தலைவர் வி.என்.ஷிவ் சங்கர், உள்பட பலர் பங்கேற்றனர். விழாவின் போது பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள் தமிழக அமைச்சரிடம் இருந்து விருதுகளை பெற்றனர். சிறந்த ஐ.ஆர் நிபுணத்துவ விருதை ஜெனரல் எலக்ட்ரிக் (ஜி.இ- வெர்னோவா, கிரிட் சொல்யூஷன்ஸ்) கார்த்திக் சுப்ரமணியம், வளரும் ஐ.ஆர் புரொபஷனல் விருதை டிஎம் ஆட்டோமோட்டிவ் சீட்டிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பெருமாள் கருணாகரனும் பெற்றனர். வாழ்நாள் சாதனையாளர் விருது டொமினிக் சாவியோவுக்கு கிடைத்தது. அசோக் லேலண்ட் லிமிடெட் (ஃபவுண்டரி பிரிவு, ஸ்ரீபெரும்புதூர்) ஆர்கனைசேஷன் வித் ப்ரோஆக்டிவ் ணிஸி பயிற்சிகள் விருதை வென்றது. மனிதவளத் தலைவர் ரத்னவேல் ராஜன் வரவேற்றார். தொழில் மையத்தின் இயக்குநர் வெங்கட சாஸ்திரி என், செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன், மாநாட்டின் தலைவர் மற்றும் விப்ரோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.