மயிலிறகை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால் அது கிழக்கு திசை தான். வேண்டுமானால் வடமேற்கு திசையிலும் மயிலிறகை வைக்கலாம்
ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள், மயிலிறகை வீட்டின் வடமேற்கு திசையில் வைத்தால், ராகு தோஷத்தால் ஏற்படும் தாக்கம் குறையும்.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமானால், மயிலிறகை பாட புத்தகம் அல்லது படிக்கும் மேஜையின் மேல் வைத்துக் கொள்வது நல்லது. இதனால் மனதை ஒருநிலைப்படுத்தி, படிப்பில் முழு கவனத்தை செலுத்த முடியும்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாக சுற்ற வேண்டுமானால், வீட்டின் ஹாலில் உள்ள கிழக்கு சுவற்றில் மயிலிறகால் அலங்கரியுங்கள். இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் சுற்றுவதைக் குறைக்கலாம்.
மயிலிறகை வீட்டின் படுக்கையறையிலும் வைத்திருக்ககலாம். இதனால் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருக்கும். மேலும் தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த தோஷத்தை நீக்க 8 மயிலிறகை எடுத்து கட்டி, அதை வீட்டின் வடகிழக்கு திசை சுவற்றில் வையுங்கள். இதனால் வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்க வேண்டுமானால், ஒரு கொத்து மயிலிறகை வீட்டிற்கு வருபவர்களின் கண்களில் படும்படியான இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் கண் திருஷ்டி நீங்கும்.