
இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதால் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பா.ஜ., திட்டமிட்டு வருவதாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபாவிற்கு தேர்தல் நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. பா.ஜ. கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ”இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன.