
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் இன்று நடைபெற்றது. அவரது இல்லத்திற்கு திரை உலக பிரபலங்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நட்சத்திரங்களும் வந்திருந்தனர். சின்னத்திரை நடிகர்களும் திரண்டு வந்தனர். உதயநிதி வந்து அஞ்சலி செலுத்தினார் ரோபோ சங்கர் குறைந்த வயதிலேயே மரணம் அடைந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தார் இள வயதிலிருந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார். தினசரி குடிக்கும் பழக்கம் இருந்தது இதன் காரணமாக கல்லீரல் கெட்டுப் போனது இதற்காக சிகிச்சை பெற்று உடல் தேறி வந்தார் கடைசியாக இளையராஜா பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ரஜினிகாந்த் கமலஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்றார் . இந்த நிலையில் தான் திடீரென மரணம் அடைந்துள்ளார் அவரது மரணத்திற்கு அளவுக்கு மிஞ்சிய குடிப்பழக்கமே காரணம் என்பது தெரியவந்துள்ளது.