வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம்;

கல்லூரி மாணவி உள்பட 7 பேர் மீட்பு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பா லம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் பிரபல தனியார் ஆஸ்பத் திரி உள்ளது. இதன் அருகே கடந்த 1 1 மாதங்களாக மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வந்த தகவலின்பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மசாஜ் சென்டர் பெயரில் வெளி மாநில பெண்கள் மற்றும் தமிழக பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதியானது. இதுதொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மசாஜ் சென்டரை நடத்தி வந்த சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 35), அங்கு வேலை பார்த்து வந்த கன் னியாகுமரி மாவட்டம் குன்னம்பாறையை சேர்ந்த ஜெபின்

(26) ஆகிய 2 பேரை கைது செய்தனர் அங்கு இருந்த பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பினர். இதில் கல்லூரி மாணவிகளும் அடக்கம்.