செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இதற்காக பழனிசாமிக்கு கால அவகாசமும் அளிப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து தேனியில் தங்கியிருந்த பழனிசாமியிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதனைத் தவிர்த்துவிட்டு காரில் அவசரமாக கம்பம் பிரச்சாரத்துக்கு கிளம்பிச் சென்றார். கம்பம் பிரச்சாரத்திலும் செங்கோட்டையன் குறித்த பேச்சு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கும் செங்கோட்டையனைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை.