காகம் தலையில் அமர்ந்தால் என்ன காரணம்?
காகம் தலையில் உட்கார்ந்தால் அது ஒரு சாதாரணமான விஷயம் தான், இதற்காக நாம் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நம் தலையில் காகம் தட்டிச் செல்வதற்கு இரண்டு காரணம் உள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒன்று:-
காகத்திற்கும், முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கிறது, நாம் நம் முன்னோர்களை கும்பிட மறந்திருந்தாலோ அல்லது முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்திருந்தாலோ அதை காகத்தின் ரூபத்தில் வந்து நமக்கு நியாபகம் படுத்தும் வகையில் காகம் நம் தலையில் தட்டிச் சொல்லும்.
இரண்டு:-
பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்கு இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தன்மை உள்ளது. எனவே நமக்கு ஏதேனும் ஒரு உடல் உபாதை பிற்காலத்தில் ஏற்பட உள்ளது என்றால், அப்பொழுது காகம் நம்மை கடந்து செல்லும் போது, அது காகத்திற்கு தெரிந்திருந்தால். காகம் நம்மை எச்சரிக்கும் வகையில் நம் தலையில் காகம் தட்டிச் செல்லும்.
இவை இரண்டு காரணங்களும் காகம் நம் தலையில் தட்டிச் செல்வதற்கான காரணமாகும். சரி இதற்கான பரிகாரம்:-
·நம் வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடலாம்.
· கோவிலுக்கு சென்று சனீஸ்வர பகவானுக்கு எள்ளில் விளக்கேற்றி வழிபடலாம்.
· காகத்திற்கு உணவு வைத்து வழிபடலாம்.
· முன்னோர்களுக்கு அம்மாவாசை அன்று படையல் போட்டு வழிபடலாம்.
·குறிப்பாக ஊனமுற்றோர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம்.
இவ்வாறு காகம் பரிகாரம் செய்வதினால் தோஷங்கள் நீங்கும்.