நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம்..இந்த பூவின் அமைப்பு நடுவில் திரௌபதி, மும்மூர்த்திகள், பஞ்ச பாண்டவர்கள், 100கௌரவர்கள் என அனைவரும் கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர்.கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள்.இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம்,இதனை மஹாபாரத பூ,பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள்.இதன் ஆங்கில பெயர் கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், கிருஷ்ணரை நடு நாயகனாக வைத்து வழிபடுவர்கள் இந்த செடியை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கவும்..வீட்டிற்குள் அதிகப்படியான நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் நறுமணமான மலர்.
இது ஒரு கொடி வகையை சேர்ந்தது. சிறிய தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம்.அதிக இடவசதி, அதிகமாக வெயில் தேவையில்லை.இந்த பூவை கிருஷ்ணருக்கு மாலையாக கட்டி அணிவிக்கலாம், அலங்கரிக்கலாம்.பெங்களூர் இஸ்கான் கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் கையில் இந்த மலரை வைத்து இருக்கிறார்.இந்த செடியின் அருகில் துளசி செடி, துளசி மாடம் நட்டு வளர்ப்பது கூடுதல் பலனையும், அதிர்ஷ்டத்தையும் வீட்டிற்கு கொடுக்கும்.பர்பிள் நிறம் நம் உடலில் உள்ள சஹஸ்ர சக்கரத்தோடு தொடர்புடையது. வீட்டில் நட்டு வளர்த்து கிருஷ்ணனின் அருளை பெறவும்.