ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீ சுந்தரமூர்த்திய சுவாமிகள் ஆடி குருபூஜை விழா (11-.8-.24) நடைபெறுகிறது. குரோம்பேட்டை வசந்தம் திருமண மாளிகையில் இன்று காலை 8:45 மணிக்கு பூஜை தொடங்குகிறது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி தேவாரம் ஓதுதல் மற்றும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 11 மணியளவில் தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.வடபழனி சந்திரமவுலி சிவாச்சாரியார் இதனை தலைமை ஏற்று நடத்துகிறார்.