அமாவாசைதினத்தன்று அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கையிலே தோஷம் -பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.2. அமாவாசை தினத்திலே ஆத்மாக்களை நினைத்து வணங்கையிலே துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும்.3. அமாவாசை தினத்திலே காகத்திற்கு உணவு வைத்து உண்ணுகையில் பிதுர்களின் மனம் சாந்தி பெற்று சந்ததிகள் வாழ்வு சிறப்பு பெறும்.4. அமாவாசை தினத்திலே மஞ்சள் -காவி -சந்தன பொன்னிறம் -போன்ற உடை அணிகையிலே ‘நமக்கு நாமே நீதிபதி ‘ எனும் தத்துவத்தின் உண்மை புரிந்து விடும்.அமாவாசை அன்று இறந்த பெற்றோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் கால் படாத இடத்தில் இறைத்தால் இறந்தவர்களின் ஆத்மா குளிர்ச்சிபெறும்.குழந்தை பிறக்கும் போது மகிழ்ந்து, நல்ல முத்துக்களாக ஒளிரும் பொழுது நெகிழ்ந்து, நாம் நம் ஆத்மாக்களை அன்போடு நினைக்கையிலே நம்மை மனமுவந்து வாழ்த்தி ஆனந்தப்படும்ஆத்மாக் களுக்கு அமாவாசையன்று மனதார நினைத்து வழிபட்டுவாழ்க்கைப் பயனை அடைவோம்..