பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை இந்த லிக்யூட் தயாரிக்க நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்திய பிறகு தூக்கிப் போடும் புளி வடிகட்டிய திப்பியை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி போடாமல் அதையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து குக்கரில் நீங்கள் சேகரித்து வைத்த புளி சக்கை ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் மூன்று எலுமிச்சை பழத்தோல் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பத்து ரூபாய்க்கு கடையில் பூந்திக்கொட்டை வாங்கி அதையும் இத்துடன் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைத்து ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். –
குக்கரின் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு பூந்திக் கொட்டையில் இருக்கும் கொட்டையை தனியாக எடுத்து விட்டு அதன் சக்கை, புளி சக்கை, எலுமிச்சை பழத்தோல் மூன்றையும் மிச்சியில் சேர்த்து நன்றாக அரைத்த பிறகு அதை வடிகட்டி கொள்ளுங்கள். இத்துடன் இதையெல்லாம் வேக வைக்க பயன்படுத்திய தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது வேக வைத்த தண்ணீர் வடிகட்டிய சாறு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மஞ்சள் தூள் கலந்து நன்றாக குலுக்கிய பிறகு பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த லிக்விட் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு பாத்திரம் தேய்க்க போதுமானதாக இருக்கும்.
இதில் பூந்திக்கொட்டை சேர்த்திருப்பதால் நன்றாக நுரைக்கும். அதில் சேர்க்கும் புளி எலுமிச்சை சாறு மஞ்சள் இவையெல்லாம் நம் உடலுக்கு எந்த வகையிலும் கேடு விளைவிக்காது. அதுமட்டுமின்றி வீணாக கீழே போடும் பொருட்களைக் கொண்டு இதை தயாரித்து இருப்பதால் பணமும் மிச்சமாகும்.