
அஸ்தினாபுரம் அருள்மிகு மகா சதுர் குன்று விநாயகர்- மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் (புற்று) ஆலயத்தில் ஆடித்திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு கூழ்வார்த்தல் நடக்க இருக்கிறது. நேற்று மதியம் தொழிலதிபர் எம்.ஜெயபால், அஸ்தினாபுரம் லயன் சி.ஆர் மதுரை வீரன் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன், சந்திரசேகரன், சி.ஆர்.மூர்த்தி, ஆர்.கே.பில்டர் உரிமையாளர் கண்ணன், ரூபிங் கோ.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.