
உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பல்லாவரத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி 10 துறைகளை ஆய்வுசெய்தார்.
பல்லாவரம் நாகல் கேணி அரசு ஆதிதிரவிடர் மணவர்கள் விடுதியில் இரவு உணவை சாப்பிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று காலை முதல் பல்லாவரம் தொகுதியில் தங்கினார்.
அதனையடுத்து வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, சமுக நலன் மகளிர் மேம்பாடு, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் உள்ளிட்ட 10 துறை அதிகாரிகளுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது பல்லாவரம் அடுத்த நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர், மாணர்கள் விடுதியில் மாணவர்களுக்கான உணவு அதன் சுவை, தரம் குறித்து கேட்டறிந்த நிலையில் சமயலறைக்கு சென்று அங்கு இருந்த தோசைகல்லில் ஊத்தப்பம் போட்டு அதனை ருசித்து உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
முன்னதாக பல்லாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர் பெர்ணட், 26 வார்டு மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர், நலச்சங்க நிர்வாகிகள் முருகையன், அரசி, சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மக்கள் பிரிதி நிதிகள் கலந்துக்கொண்டனர்.
இதில் பல்வேறு துறைகள் சார்பில் 500 க்கும் மேற்பட்டவர்கள் குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய நிலையில் தகுதியான மனுகள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ்:-
பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இருப்பிடங்களுக்கு சென்று ஆட்சியர், அதிகாரிகள் நேரில் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி தந்தனர்.
அந்த முறையில் தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். அதன் பேரில் இன்று நாள் முழுவதும் மாவட்ட தலைமை இடத்திற்கு செல்லாமல் பல்லாவரத்திலேயே தங்கி பல துறைகளை ஆய்வு செய்துள்ளேன், மேலும் மக்களிடம் குறைகளை பெற்றுள்ள நிலையில் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.