தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் புதிய காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார்.

தாம்பரம் மாநகர காவல் எல்லை துவங்கப்பட்ட போது 20 காவல் நிலையங்கள் இருந்தது. அதன் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிளாம்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது.

தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிகரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு கோவிலம்பாக்கத்தில் மேடவாக்கம் காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. உடன் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் கெளதம் கோயல், உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெய்சில், உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

தற்போது தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 22 காவல் நிலையங்கள் உள்ளது.