
வலி மண்டலம் இல்லாத நிலவில் கதிர்வீச்சுகளில் இருந்து தப்ப குகைகள் பயன்படும். பாறை குழம்புகள் வெளியேறிய பகுதிகள் பள்ளங்களாகவும், குகைகளாக நிலவில் பல பகுதியில் உள்ளது சந்திரியான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கேளம்பாக்கம் அருகே பேட்டி:-
சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூரில் ஏவுகளை ஆராய்சியாளர் ஆனந்த் மேகலிங்கம் புதியதாக 9600 சதுர அடியில் அமைத்துள்ள ஆராய்சிமைய்யத்தை சத்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை :- வின்வெளி ஆராய்சி, செயற்கைகோள் ஏவுதல், ஏவுகணை தயாரித்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை மத்திய அரசு துறைகள் மட்டும் செய்து வந்தன.
இந்த நிலையில் தனியாரும் மத்திய அரசு துறையினர் அனுமதியுடம் செயல்படலாம் என கூறியதை அடுத்து ஆனந்த் மேகலிங்கம் போல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், பல்வேறு பொறியியல் துறையினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி நேரடி பயிற்சி பெற வாய்பாக அமைந்துள்ளது என்றார்.
நிலவின் பல்வேறு பகுதியில் குகைகள் உள்ளது தெரியவந்துள்ளது பற்றி கேட்டபோது:-
நிலவில் பல்வேறு பகுதியில் பள்ளங்கள், குகைகள், இரு பக்கம் இனையும் விதமான குகைகள் கூட உள்ளதை சந்திரியான் 1 திட்டத்தின் போதே தெரிய வந்தது ஆனாலும் அதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதனை மனிதன் வளிமண்டலம் இல்லா நிலவில் தங்கும்போது கதிவீச்சு தாக்கமல் இருக்க இதுபோல் குகைகளில் தங்க முடியுமா என அய்வில் உள்ளது. பூமியில் குகைகளில் வாழ்ந்த மனிதன் அடுத்து இருப்பிடங்களை தேர்வு செய்ததுபோல் நிலவிலும் ஆகலாம் என்றார்.
விண்வெளி மைய்யத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம் திரும்புவது தாமதம் பற்றி கேட்டபோது:- வின்வெளி மைய்யத்தில் சுனிதா வில்லியமஸ் உடன் சிலரும் தங்கியுள்ளனர். குறிபிட்ட நேரத்தில் திரும்ப விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹிலியம் வாயு கசிவு காரணம் எனவும் அதனை சரி செய்யும் முயற்சியில் உள்ளனர். அது பலன் தராவிட்டில் தனியார், அல்லது ரஷ்யா, சீனா போன்ற நாட்டினரின் விண்கலம் மூலம் மீட்டுவர முனைவார்கள் இது போல் ஏற்கனவே நடைபெற்றுள்ளது என்றார்.
ககல்யான் திட்டம் குறித்து கேட்டபோது :- நிலவிற்கு ஆட்களை அனுப்பும் திட்டம் பயிற்சியில் உள்ளது, மற்ற நாடுகளை போல் தங்கி பின்பு வருவதுபோல் அல்ல பணியை முடித்து மீண்டும் திரும்பும் திட்டம் இது இதற்கான பாதுகாப்புகளை மீண்டும் மீண்டும் உறுதி செய்திட வேண்டியுள்ளது. அதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்ப பாதுகாப்புகளை கையாண்டு வருகிறார்கள் என மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.