
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.
இந்தக் கட்டண உயர்வு (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல்.
இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது