டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன?

ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 19.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நேர்முகத் தேர்வு பதவிகள் (குரூப் 2)

உதவி ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

துணை வணிக வரி அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 336

கல்வித் தகுதி: பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

நன்னடத்தை அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

சார் பதிவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

சிறப்பு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

தனிப்பிரிவு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 18

உதவிப் பிரிவு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 16

உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: கணினி படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 16

வனவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 114

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 16

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் (குரூப் 2ஏ)

தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15

முழுநேர விடுதிக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 13

முதுநிலை ஆய்வாளர் (கூட்டுறவு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 497

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 12

தணிக்கை ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 12

உதவி ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 273

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 12

கைத்தறி ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 12

மேற்பார்வையாளர்/ இளநிலைக் கண்காணிப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 11

உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 820
(பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உதவியாளர்கள்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10, நிலை 9

செயல் அலுவலர் (பேரூராட்சி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: பி.காம், பி.ஏ வணிகவியல் சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

தணிக்கை ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

நேர்முக எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 121

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

கணக்கர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 38

கல்வித் தகுதி: பி.காம் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

இளநிலை கணக்கர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: பி.காம் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

ஆண் கண்காணிப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

விரிவாக்க அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூட்டுறவு படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 10

கீழ்நிலை செயலிட எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை 9

வயது வரம்பு; 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு வேறுபடும்.

தேர்வு முறை: குரூப் 2 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகதேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். குரூப் 2 ஏ பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு இரண்டு பதவிகளுக்கும் ஒன்றாக நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான தகுதித் தேர்வு மட்டுமே.
முதல்நிலைத் தேர்வு மூன்று பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், 2 ஆம் பகுதியில் திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். மூன்றாம் பகுதியில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு நடைபெறும் நாள்: 14.09.2024

குரூப் 2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு

இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாள் பொது அறிவு. 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். பொது அறிவு பகுதியில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு

இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு விரிந்துரைக்கும் வகையில் நடைபெறும். இரண்டாம் தாளில் பொது அறிவில் 100 வினாக்கள், திறனறியில் 40 வினாக்கள், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 60 வினாக்கள் என 200 வினாக்களுக்கு நடைபெறும். 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.