
குரோம்பேட்டை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 25 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த முறையில் கல்விச் சேவையை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவச் செல்வங்கள் ஊடகத் துறையிலும் சிறந்து விளங்கும் பொருட்டு கடந்த கல்வி ஆண்டு (2023-2024) முதல் பி.எஸ்சி Visual கம்யூனிகேசன் மூன்று வருட பட்டப்படிப்பை திறம்பட நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களின் தொழில்நுட்ப நுண்ணறிவை மேம்படுத்தும் வகையில் Visual எபக்ட்ஸ், மல்டிமீடியா, 3D மாடலிங், வீடியோ எடிட்டிங் என ஊடகத்துறைச் சார்ந்த அனைத்து தளங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் பயிற்சிக்காக செய்தி வாசிப்பு அறை (News Room), விவாத மேடை (Debate Room), Visual எபக்ட்ஸ் தளங்கள் என தற்போதைய முன்னணி ஊடகத்துறை நிறுவனங்களுக்கு நிகரான வகையில் பயிற்சி அறைகள் நவீன தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காட்சிப்படுத்துதல் தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்வதற்கான நூல்களை உள்ளடக்கிய நூலகம் உள்ளது. மாணவர்களின் தேவைக்காக அதிக எண்ணிக்கையில் புகைப்பட (Camera) கருவிகள் உள்ளது. பழகுநர் பயிற்சி: ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் மாணவர்கள் பணி அனுபவம் பெறும் வகையில் ஊடக நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் துறைகள்: தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி Visual கம்யூனிகேசன் படிப்பை முடித்த பிறகு மாணவர்களுக்கு வளாக தேர்வு மூலமாக கீழ்கண்ட துறைகளில் பணிபுரியும் வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறோம். திரைப்படத்துறை, புகைப்பட பத்திரிக்கையாளர், வீடியோ தயாரிப்பு, ஊடக மேலாண்மை, எழுத்தாளர், அனிமேட்டர், கார்ட்டூனிஸ்ட், கணினி ஓவிய வடிவமைப்பாளர், வலைதள வடிவமைப்பாளர், திரைப்படம், விளம்பரத்துறை, மென்பொருள் சார்ந்த தொழில் நுட்பவியலாளர் போன்ற துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் மிகுந்த ஊதிய பெறும் துறையாகவும் உள்ளது. அட்மிஷன் தொடர்பான விவரங்களுக்கு- 044-22418061 / 22411552 / 22410330 / 91767 64765