
பல்லாவரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறமால் நடத்திய பொருட்காட்சிக்கு வருவாய் துறையினர் மூடி சீல்வைத்தனர்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கண்டோன்மெண்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆட்டுதொட்டி மைதானத்தில் குஷி எண்டர்டெயின்மெண்ட் நிர்வகத்தினர் பொருட்காட்சி நடத்திவருகிறார்கள்.
14ம் தேதி துவங்கிய இந்த பொருட்காட்சிக்கு பெரியவர்களுக்கு 60 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் என பெறப்பட்டாலும் உள்ளே பல்வேறு ராட்டினங்கள், ரோபோடிக் அனிமல் கண்காட்சி, நொருக்கு தினி கடைகள், விட்டு உபயோக பொருள்கள் விற்பனை நிலையம் என அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் தீடீர் சோதனை செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை, மைதானத்தை முழுமையாக சம்படுத்தப்படவில்லை ராட்டினங்கள் இயக்க முறையான சோதனை அனுமதியில்லை, மின்சார ஒயர்களை பாதுகாப்பாக பயன்படுத்தாமல் தண்ணீரில் நனைந்த பாதுகாபற்ற முறையில் உள்ளது என பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி அங்குள்ளவர்களை வெளியேற்றி சீல் வைத்தனர்.
இதனால் தங்களில் மூலதனம் போடப்பட்ட பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என கடை நடைத்தியவர்கள் சிறுதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆனாலும் முறையாக அனுமதி பெற்றுவரவேண்டும் என கூறி கேட்டை முடிய வருவாய் துறையினர் சீல் வைத்து சென்றனர்.