உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கும் ராகுல்காந்தி.

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார், ராகுல்காந்தி.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் சென்று வேட்புமனு தாக்கல்.

ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.