ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் பலி.. ஒருவர் சடலம் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற பொத்தேரி எஸ்ஆர்எம் வள்ளியம்மை கல்லூரியில் பயின்று வந்த B.E.,இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முகமது இஸ்மாயில், விஜய்சாரதி, தீபக்சாரதி உள்ளிட்ட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். தற்போது சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர். இதில் இரண்டு மணிநேர போராட்த்திற்கு பிறகு விஜய்சாரதி உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இருவரது உடல் தேடப்பட்டு வருகிறது