நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும் என தோ்தல்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் கணித்துள்ளாா்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல் செலவுகளைவிட தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் செலவே மிக அதிகமானது எனவும் உலகிலேயே மிக அதிகமாக செலவு செய்யப்படும் பிரம்மாண்ட தோ்தலும் இதுதான் எனவும் அவா் தெரிவித்தாா்