
இராகவேந்திரர் ப்ருந்தாவனத்திற்கும் மற்ற மூர்த்திகளுக்கும் வெள்ளிக்கவசத்துடன் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு ஹரிவாயுஸ்துதி புணச்சரணத்துடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு மதியம் நான்கு மணிக்கு பிரபல பண்டிதர் நெய்வேலி இராமன் பஞ்சாங்க ஸ்ரவணம் மிகத்திரளான பக்தர்கள் பங்கேற்க சிறப்பாக நடந்தது. இந்த பஞ்சாங்க கையேடை ஸரஸ்வதி பதி (தத்வவாத ஆசிரியர்) வெளியிட முதல் பிரதியை பாரிஜாத ஸ்ரீனிவாஸராவ் பெற்றுக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கையேடு அளிக்கப்பட்டது.