அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாநகராட்சி தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர். அழகுமீனா தலைமையில் சிட்லபாக்கத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் தங்களின் வாக்குகளை 100 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் நாட்டுப்புற கலைகளான தப்பாட்டம், தெருக்கூத்து மற்றும் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். கைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மனித சங்கிலி பேரணி நடத்தினர். பெண்களுக்கு சிறப்பு கோலப்போட்டி நடைபெற்றது. மேலும் வியாபாரிகள், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.