
பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருக்கும் நடைமுறைக்கு மாறாக, குழந்தைக்குப் பத்தியம் இருக்கும் தாயின் கருணைப் பெருக்கால் உலக நன்மைக்காக அம்மனே பச்சைப் பட்டினி விரதம் காக்கிறாள் மாசி மாதக் கடை ஞாயிறு பூச்சொரிதல் விழாவுடன் இந்த விரதம் தொடங்கும் .பூச்சொரிதலின் போது அம்மனுக்குப் பூக்கள் வந்து குவியும்.
சித்திரை, வைகாசி கத்திரி வெயிலின் தாக்கத்தைத் தாயாய் இருந்து தான் ஏற்றுக்கொண்டு,மக்களைக் குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே பூமாரி பொழிந்தும், இளநீர், மோர், பானகம்,வெள்ளரிப்பிஞ்சு, துள்ளுமாவு நிவேதித்தும் அவளைக் குளிரச் செய்கிறார்கள். கூடை கூடையாகப் பூக்களைப் பக்தர்கள் அனுப்பிவைக்கும் அன்பு நெகிழச் செய்யும்.
பூச்சொரிதல் திருவிழாவை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவசனம் நிறைவு செய்து அம்மனுக்குக் காப்புக் கட்டுகிறார்கள்.
திருக்கோவிலின் தென் கரையிலிலுள்ள சுப்பிரமணியர் கோவிலில் இருந்து யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து ஊர்வலமாக நான்கு தேரோடும் வீதிகளிலும் வலம் வந்து பிரதட்சணம்.