தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சங்கரலிங்க சுவாமி பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலம்.
தற்போது நடைபெறும் சிவராத்திரி முன்னிட்டு சுற்றி உள்ள கிராமம் மக்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசியில் இருந்து ரயிலில் பயணம் செய்து வந்துள்ளறர். சிலர் பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
சிறு குழந்தைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கோவிலில் பிரசாதங்கள்
மற்றும் தேவார இன்னிசை கச்சேரி ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
ஆனால், தற்போது நிலவரப்படி எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என பக்தர்களின் குற்றசாட்டு.
பலர் வெகு தொலைவில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்து உள்ளனர். கையில் பிரசாதங்கள் தான் அவர்களின் இன்றைய உணவு.
அடிப்படை வசதிகளும் தற்போது சரியாக இல்லை.
பேருந்து புதிய பழைய நிலையம் குளறுபடிகளும் உள்ளது.
சிவராத்திரியில் சிவனை தரிசிக்க வந்த பக்தர்கள் பலர் இன்னல்களில் தவித்து வருவதாக புலம்புகின்றனர்.