
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலம் 40ஆவது வார்டு கௌரிவாக்கம் நகர்ப்புற சுகாதார மையத்தில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். பின்னர் பவணந்தியார் தெரு குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையத்தில் நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கினார். திருமலை நகர் கிளை நூலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி சிறப்பு முகாமை துவங்கி வைத்தார்.