உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷியாதான். மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷிய அதிபர் புதின் அந்த நாட்டு மக்கள் குறைந்தது 8 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கடந்த 2022-ம் ஆண்டில், ரஷிய ராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், போரினால் ஏராளமான ரஷியர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அதிக அளவில் மக்கள் ரஷியாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டின் ஆரம்பத்தில், ரஷியாவின் மக்கள் தொகை 146.4 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாகவும் அதுவும் குறிப்பாக கொரோனா, ரஷியா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் மேலும் குறைந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.