தமிழ்நாடு அரசு தயாரித்து, சபாயநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையை தவிர ஆளுநர் தனிப்பட்ட முறையில் பேசிய அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்;

சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி
நாளை 13ஆம் தேதி மறைந்த சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ். எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓடிஸா மாநில முன்னாள் ஆளுநருமான எம். எம். இராஜேந்திரன், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

இதை தொடர்ந்து வரும் 14-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.

15-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை அளிக்கிறார்.

பிப்.19ம் தேதி2024-2025-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார் .
பிப்.20- ந் தேதி 2024- 25- ஆம் ஆண்டிற்கான வேளாண் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்.21-ந் தேதி நிதிநிலை அறிக்கை ,வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் காலை மாலை இரு வேலைகளும் நடைபெறும்.

பிப்.22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்‌ பதிலுரையுடன் நடைபெறும்.

பல மாநிலங்களில் ஆளுநரை சட்டசபைக்கே அழைப்பதும் இல்லை- சபாநாயகர் அப்பாவு

உண்மைக்கு புறம்பான எந்த கருத்தும் ஆளுநர் உரையில் இல்லை- சபாநாயகர் அப்பாவு

தமிழ்த் தாய் வாழ்த்துடன் சபையை தொடங்குவதுதான் மரபு- சபாநாயகர் அப்பாவு.