பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
தலா 17 இடங்களில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு ஐந்து இடங்கள் , மார்க்சிய பொதுவுடமைக் (லெனின்)கட்சிக்கு ஒரு இடம் என பேசி வருகிறார்கள்.
ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் 22ஆம் தேதி அன்று அதிரடி அறிவிப்பை வெளியிட முதல்வர் நிதீஷ் குமார் திட்டமிட்டுள்ளார்..
அன்று பீகார் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.