காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் 1600 ஆண்டு தொன்மையானது இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இன்னிலையில் கோயிலில் உள்ள அரிய வகை மரங்களான சிவபூஜைக்குரிய நாகலிங்க மரம், சரக்கொன்றை மரம், வன்னி மரம் , மாமரம்,200 ஆண்டு தொன்மையான அரசமரதத்துடன் இணைந்த வேப்பமரம்,வில்வ மரம், இதற்கும் மேல் அநியாத்திற்கு உச்சத்திற்கு சென்ற இக்கோயில் அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலர் நடராஜன் ஸ்தல விருட்ச முருங்கமரத்தையே வெட்டியுள்ளார்கள். ஏன் இந்த மரத்தை வெட்டினா்கள் என்றால் அதில் தான் வேடிக்கையே கும்பபிஷேகத்திற்கு யாக குண்டத்தில் போடாவாம் சுமார் 50 லட்சம் செலவில் பிரம்மாண்ட யாகசாலை கட்டியவர்களுக்கு யாக குண்டத்தில் போடா விறகு வாங்குவதற்கு பணம் இல்லையாம்?

காஞ்சிபுராணத்தில் அன்று தொட்டு என்றும் அக்காஞ்சியில் நீங்காது அமர்ந்திடும் கொன்றைவார் சடையனைக் கச்சபேசன் தனைக் கும்பிடச்’ சென்றவர் கண்டவர் கருதினர் யாவரும் தீது தீர்ந்து ஒன்றி ஒன்றா நிலை மாறிலா முத்தி பெற்றுய்வரே – கூறப்பட்டுள்ளது அத்தகையா படல்பெற்ற ஸ்தலத்திலேயே சரக்கொன்றை மரத்தை அடியோடு வெட்டி உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை இது மிக கொடிய செயல்

இயற்கை காற்று ஓட்டமும் ,நிழலும் கொடுத்த மரங்களை எவ்வித இடையூறும் இல்லாத மரங்களை வெட்டப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமா உள்ளது.

இதை கண்டு நம்மால் என்ன செய்ய முடியும் என்று அழுது சென்ற பக்தர்களுக்குகாக இந்த பதிவு