குமரிக்கடல் நோக்கி நகரும் காற்று சுழற்சி & ஈரப்பதமான காற்று குவிதல் காரணமாக டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஆறாம் சுற்று மழை தீவிரமடைய கூடும். 29.12.2023 முதல் 31.12.2023 வரை: தென்மாவட்டங்கள் & டெல்டா மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும்.
குறிப்பாக மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் 29, 30 தேதிகளில் அதிகனமழை வாய்ப்பு உள்ளது.
சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல மத்திய அடுக்கின் மேற்கு & கீழ் அடுக்கின் கிழக்கு காற்று குவிதல் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் அதித கனமழையும் ஏற்படும்
சபரி மலை செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் டிசம்பர் 29 முதல் ஜனவரி 1 வரை உங்கள் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.
தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர்.