இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ரயில் எண் 12693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 21.12.2023 அன்று வழக்கமான அட்டவணையில் தூத்துக்குடி வரை இயக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை மற்றும் தூத்துக்குடி இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 12694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 22.12.2023 அன்று தூத்துக்குடியில் இருந்து அதன் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் மதுரை இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.