நாகை: தூத்துக்குடியில் கனமழை காரணமாக உப்பு விற்பனை முடங்கியுள்ளதால் நாகை வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை: செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை காவலர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். சென்னை சிந்தாதரிப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்கிறது.

நெல்லை: NGO ‘B’ காலனி செல்லும் வழியில் திங்களன்று பைக் உடன் வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை தேடி வந்த நிலையில், நேற்று மாலை பைக் கிடைத்தது. இன்று 19 வயதேயான அருணாச்சலத்தின் உடல் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மதுரை: பெருமழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, நேற்று மதியம் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணியான அனுசுயா (27) என்பவருக்கு, இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது.

திண்டுக்கல்:
பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட திருமாவளவன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் பழனி தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.