
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருகிறது – சராசரியாக 28 செ.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம், இன்னும் கூடுதலாக திறக்க வாய்ப்பு
பாபநாசம் அணைக்கு 40,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்.
கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு
அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகிறது – நெல்லையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி